நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் மழை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64 அடியாக உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் நீடித்து வரும் மிதமான மழையால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 64 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
கடந்த 5 தினங்களில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 9 அடியும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 5.50 அடியும், ராமநதி அணையின் நீ்ர்மட்டம் 3 அடியும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 9.50 அடியும் உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணையில் 3 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 9 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 8 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1686 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 279 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 72 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு,
அணைகளுக்கு தலா 10 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 69 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாசனத்திற்கு பாபநாசம் அணையில் இருந்து 1105 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 55 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 105 கனஅடியும், ராமநதி அணையில் இருந்து 40 கனஅடியும், கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 10 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம் நிலவரம்: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.15 அடி உயர்ந்து 63.85 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 78.08 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55.33 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 66.00 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 96.50 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...