ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கஞ்சா வியாபாரிக்கு தகவல் கொடுத்த பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாராக பணிபுரிந்து வந்தவர் மகேஸ்வரி. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா தராளமாக புழக்கத்தில் இருப்பதாக மதுரை போதை

News image
Updated On :9 ஆகஸ்ட் 2014, 3:16 pm

கோ.ஜெயக்குமார்

போதை தடுப்பு போலீஸார் சோதனைக்கு வருவதை முன்கூட்டியே கஞ்சா வியாபாரிக்கு தெரிவித்த வன்னியம்பட்டி காவல் நிலைய பெண் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி ஆயுதப்படைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாராக பணிபுரிந்து வந்தவர் மகேஸ்வரி. ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா தராளமாக புழக்கத்தில் இருப்பதாக மதுரை போதை தடுப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் சனிக்கிழமை அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு அவர்கள் வருவது வன்னியம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மகேஸ்வரிக்கு தெரியவந்ததுள்ளது. இவர் இத்தகவலை உடனடியாக வைத்திலிங்காபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி மகாலிங்கம் என்பவரிடம் கூறியுள்ளார். அவர் உடனடியாக கஞ்சா மூட்டைகளுடன் தப்பி ஓடிவிட்டார். இது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனின் உடனடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து மகேஸ்வரியை உடனடியாக விருதுநகர் ஆயுதப்படையில் வந்து பணியில் சேர அவர் உத்தரவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம், இப் பகுதியில் உள்ள நூற்பு ஆலையில் ஒரு பிரச்னையில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக இவர் வன்னியம்பட்டி காவல் நிலையத்திலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

கஞ்சா வியாபாரியிடம் மாமுல் வாங்கிய எஸ்.எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

போதை தடுப்பு போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்ம்பட்டியைச் சேர்ந்த ராக்கு என்ற கஞ்சா வியாபாரியை சனிக்கிழமை அதிகாலை பிடித்து பெருமளவு கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அப்போது அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சத்தியநாதனுக்கு வாடிக்கையாக மாமுல் கொடுப்பதாகக் கூறியுள்ளார். இத்தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனின் உடனடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவரும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.