தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் அகில இந்திய மாணவர் கழக மாநிலக்குழு உறுப்பினர் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இரு தினங்களாக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்கலைக்கு

News image
Updated On :9 ஆகஸ்ட் 2014, 2:17 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் அகில இந்திய மாணவர் கழக மாநிலக்குழு உறுப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் இரு தினங்களாக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டு, மாணவர்கள் சனிக்கிழமை காலை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் அகில இந்திய மாணவர் கழக மாநிலக்குழு உறுப்பினராக உள்ள விருத்தாசலம் பெண்ணாடம் ரோட்டு காந்திநகரைச் சேர்ந்த தனவேல் (31) வெள்ளிக்கிழமை பல்கலைக்கழகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது நுழைவுவாயிலில் இருந்த பல்கலைக்கழக பாதுகாவலர் கஸ்தூரிரங்கன் (56), பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, உள்ளே நுழையக்கூடது எனக்கூறி தடுத்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த தனவேல், பாதுகாவலரை திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதுகாவலர் கஸ்தூரிரங்கன், அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து தனவேலை கைது செய்தார். கைது செய்யப்பட்ட தனவேல் பிளஸ்டூ படித்து முடித்துவிட்டு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 2-வது சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றுகிறார் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.