ஊர் பெயர் பிரச்னை: நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்தில் திருவம்பலபுரம் ஊராட்சியில் தோட்டாவிளை கிராமத்தின் பெயரை தோட்டாபுரம் என மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை அக்கிராம


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்தில் திருவம்பலபுரம் ஊராட்சியில் தோட்டாவிளை கிராமத்தின் பெயரை தோட்டாபுரம் என மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை அக்கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராதாபுரம் ஒன்றியம், சிதம்பராபுரம் ஊராட்சியில் 2 ஆவது வார்டுக்கு சிதம்பராபுரம் என பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி ஒரு தரப்பினரும், யாக்கோபுரம் என பெயர் சூட்ட வேண்டும் என மற்றொரு பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பிரச்னையில் சிதம்பராபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ராதாபுரம் ஒன்றியத்தில் இன்னொரு கிராமத்தின் பெயரை மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. திருவம்பல்புரம் ஊராட்சியில் உள்ள தோட்டாவிளை என்ற கிராமத்தின் பெயரை தோட்டாபுரம் என மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தோட்டாவிளை கிராமத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் 100 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். தோட்டாவிளை கிராமத்தின் பெயர் தொடர்ந்து தோட்டாவிளை என்ற பெயரிலே செயல்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒருவர் தோட்டாவிளையில் தோட்டத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகிறார். மேற்கண்ட நபர் அங்கு கிறிஸ்தவ ஆலயம் கட்டவும், அக்கிராமத்தின் பெயரை தோட்டாபுரம் என மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.
தொடர்ந்து அரசு ஆவணங்களில் தோட்டாவிளை என்ற பெயரில் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி அக்கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் மாநகர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் டி. பாலாஜிகிருஷ்ணசாமி, மாவட்டச் செயலர் வேல்ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...