தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடலூரில் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி

News image
Updated On :11 ஆகஸ்ட் 2014, 11:08 am

ஜி.சுந்தரராஜன்

கடலூரில் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர் அவர்கள் மறியலுக்கு முயன்றபோது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.மச்சேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சி.ராமநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.ரெங்கசாமி, மாவட்டத் தலைவர் எம்.கணேசன், கே.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என்.காசிநாதன், கல்யாணசுந்தரம், அணைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.