தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் உடைப்பு: சாலைமறியல்

கடலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பங்களை சேதப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2014, 12:20 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பங்களை சேதப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூர் வட்டம் விலங்கல்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு ஆகிய இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பத்தை செவ்வாய்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. சேதப்படுத்தியதை கண்டித்தும், குற்றவாளிகளை உடன் கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடுவீரப்பட்டில் மாவட்டச் செயலாளர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

சம்பவ இடத்திற்கு போலீலார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொடிக்கம்பம் உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சாலைமறியல் போராட்டத்தில் மாவட்ட துணைச்செயலர் ஸ்ரீதர், ஒன்றியச் செயலர் சக்திவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியரிடம் புகார்: இச்சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பா.தாமரைசெல்வன் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அம்மனுவில் மர்ம மனிதர்கள் சிலர் சாதி கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தி வருகின்றனர். கடலூர் வட்டத்தில் இதுவரை 7 முறை கொடிக்கம்பம் உடைக்கப்பட்டுள்ளது. காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில தாமரைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.