ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டம் ஜக்கையாப்பேட்டையைச் சேர்ந்த ராமு(26) என்பவர், அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். வேலைக்குச் செல்லும் வழியில், பங்காருப்பேட்டையச் சேர்ந்த ரமணம்மா(24) என்பவர் அவருக்கு அறிமுகமானார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வராம். ஒருநாள் திடீரென ராமுவிடம் தான் அவரைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார் ரமணம்மா. ஆனால், தன் அத்தை மகளை தான் திருமணம் செய்யவிருப்பதாகவும், தான் ரமணம்மாவைக் காதலிக்கவில்லை என்றும் ராமு கூறியுள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த ரமணம்மா, தொடர்ந்து பலமுறை ராமுவை தன்னைக் காதலிக்குமாறும் திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ராமுவுக்கும் அவரது அத்தை மகளுக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த ரமணம்மா கோபம் கொண்டாராம். ராமுவை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்காததால், அவரை உறவினர் மூலம் ஏமாற்றி ஓர் இடத்துக்கு வரச் செய்துள்ளார். அங்கே அவருடன் தகராறில் ஈடுபட்ட ரமணம்மா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமுவைக் குத்தி காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டாராம்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராமுவை அருகில் இருந்தோர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமுவின் புகாரின் பேரில் ஜக்கையாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரமணம்மாவைக் கைது செய்தனர்.
ராமு மீதான காதலை மறக்க முடியாததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக ரமணம்மா போலீஸாரிடம் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

