மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில், பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :20 ஆகஸ்ட் 2014, 2:42 pm

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில், பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரிய பிரிப்பு அமலாக்கத்தை கைவிட வேண்டும். மஸ்தூர்கள் அனைவரையும் களஉதவியாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டும். பகுதிநேர ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். புதிய பிரிவுகளுக்கு பகுதிநேர ஊழியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும். 2 ஆண்டுகள் பணிமுடித்த கள உதவியாளர்களுக்கு கம்பியாளர் பதவிஉயர்வு வழங்க வேண்டும். காற்றாலை பண்ணையில் பணிபுரியும் மஸ்தூர்களுக்கு களஉதவியாளர் பதவிஉயர்வு வழங்க வேண்டும். மின்இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.பூலுடையார் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ.  மாவட்டச் செயலர் ஆர்.மோகன் தொடக்கவுரையாற்றினார். திட்டத் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், திட்டப் பொருளாளர் டி.வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

திட்டச் செயலர் எம்.பீர்முகம்மது ஷா, திட்ட துணைத் தலைவர் எஸ்.முத்துக்குமாரசாமி, மண்டலச் செயலர் எஸ்.வண்ணமுத்து ஆகியோர் பேசினர். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.