வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மணிமுத்தாறில் பெண் காவலரை கொல்ல முயன்ற சம்பவம்: காவலர் பணியிடை நீக்கம்

மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் காதலை ஏற்க மறுத்த பெண் காவலரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற காவலர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக

News image
Updated On :23 ஆகஸ்ட் 2014, 3:18 pm

ஷேக் அப்துல்காதர்

மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் காதலை ஏற்க மறுத்த பெண் காவலரை கழுத்தை நெறித்து கொல்ல முயன்ற காவலர் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள காவலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் அனுஷா (22).
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பருத்திப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரராஜா (25). இருவரும் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் 9 ஆம் அணியில் காவலர்களாக பணி செய்து வருகின்றனர்.
ராமச்சந்திரராஜா, அனுஷாவை காதலித்து வந்தாராம். அனுஷா இதனை ஏற்கவில்லையாம். இதனிடையே வியாழக்கிழமை இரவு அனுஷாவை சந்தித்த ராமச்சந்திரராஜா மீண்டும் வற்புறுத்தினாராம். அனுஷா மறுத்ததால் ஆத்திரத்தில்  துணியால் ராமச்சந்திரராஜா, அனுஷாவின் கழுத்தை நெரித்து கொல்ல
முயன்றாராம்.

இதில் மயக்கமடைந்த அனுஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சனிக்கிழமை காவலர் ராமச்சந்திரராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சிறப்பு காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமறைவாக உள்ள ராமச்சந்திரராஜாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.