ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்னா

திருநெல்வேலியில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை தர்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2014, 11:34 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை தர்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொலை தொடர்புதுறையில் பணியில் உள்ள தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களின் வீட்டு வாடகைப்படி அல்லது குடியிருப்பு வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம், தொலை தொடர்புத்துறை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் தர்னா போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தர்னா போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் கே. செல்வராஜ் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் என். சூசைமரியஅந்தோணி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. சுவாமிகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க மாநில துணைச் செயலர் சி. பழனிச்சாமி தர்னாப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில அமைப்புச் செயலர் டி. கோபாலன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலர் முத்துகுமரசாமி, சிஐடியூ பொதுச்செயலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.