அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போதையில் பணிபுரிந்த காவலர் பணியிடை நீக்கம்

  காவலர்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா செவ்வாய்க்கிழமை

News image
Updated On :26 ஆகஸ்ட் 2014, 3:27 pm

தர்மராஜ்

  காவலர்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா செவ்வாய்க்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மேகநாதன் (40). பெரம்பலூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, செவ்வாய்க்கிழமை காலை குடிபோதையில் சென்ற மேகநாதன், அங்கிருந்த காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள், அளித்த தகவலை தொடர்ந்து, பணியின்போது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மேகநாதனை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.