ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தேர்தல் வெற்றி: பணமும், இலவசமும் கொடுத்து பெற்ற வெற்றி: வைகோ

சாதனைகளைச் சொல்லி வெற்றி பெற்றதாய் கூறுகிறார்கள். ஆனால் பணமும், இலவசமும் கொடுத்துதான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ

News image
Updated On :28 ஆகஸ்ட் 2014, 3:23 pm

கோ.ஜெயக்குமார்

சாதனைகளைச் சொல்லி வெற்றி பெற்றதாய் கூறுகிறார்கள். ஆனால் பணமும், இலவசமும் கொடுத்துதான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நாச்சியார்பட்டியில் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ம.தி.மு.க. உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சி. தோல்வியை தாங்கிக் கொள்ளும் கட்சி. சாதனைகளைச் சொல்லி வெற்றி பெற்றதாய் கூறுகிறார்கள். ஆனால் பணமும், இலவசமும் கொடுத்துதான் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள். முல்லைப் பெரியார் பிரச்னையில் பாராட்டு விழா நடத்தினார்கள். போக்குவரத்திற்கு ரூ.300-ம், தன்னை மறந்து கை தட்டுவதற்கு ரூ.100-ம் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்ட கூட்டம் அது. 8 ஆண்டுகளாக 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்னைக்காக 625 கிராம மக்களைச் சந்தித்து போராட்டம் நடத்தினேன். இது மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டேன். ராஜூவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களுக்காக பிரபல வழக்குரைஞரை வைத்து நீதிமன்றத்தில் வாதாடினேன். நதி நீர் இணைப்பிற்காக வாஜ்பேயி பிரதமராக இருக்கும்போது மசோதா கொண்டு வந்தேன். இதுபோன்று மக்கள் பிரச்னைக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் ம.தி.மு.க. மீண்டும் ம.தி.மு.க. பெரும் எழுச்சி பெறும்.

தமிழக அரசு விவசாயிகள் கிணறு தோண்ட அனுமதி பெற வேண்டும் என்று தற்போது கூறுகிறது. விவசாயிகள் நலிவடைந்து, சந்தோஷம் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் அரசு இதுபோன்று கூறுவது ஏற்புடையது கிடையாது. கிணறு தோண்டி, தண்ணீரை விற்பனை செய்பவர்களை அரசு அனுமதி பெற்று கிணறு தோண்ட வலியுறுத்த வேண்டும். அரசின் இந்த உத்தரவால் விவசாயிகள் விரக்தியில் உள்ளார்கள் என்றார் வைகோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.