மல்லி அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டியில் யாதவர் குல வகையறாக்களுக்குப் பாத்தியப்பட்ட வீரனசாமி கோவில் உள்ளது. இக் கோவிலின் சுற்றுச் சுவர் ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள், வெளிப்புற கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அடுத்துள்ள தகரக் கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே கோவிலினுள் சென்றுள்ளனர். அங்கிருந்த தகரப் பெட்டியின் பூட்டை உடைத்து அதிலிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் கிரீடம் மற்றும் சுவாமியின் முன்பு இருந்த சில்வர் குட உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம் சுமார் ரூ.3 ஆயிரத்தைத் திருடிச் சென்று விட்டார்களாம்.