28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கார் மோதி முதியவர் சாவு: தலைமை ஆசிரியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2014, 8:12 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், தேரடிக்கு பின்புறம் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே வலது ஓரமாக ரா.ராதாகிருஷ்ணன் (70) என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது மல்லிபுத்தூரில் உள்ள அரசினர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.மகேந்திரன் (49) என்பவர் காரை அஜாக்கிரதையாக ஓட்டி வந்து ஒரு சைக்கிளின் மீது மோதி, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மீதும் மோதியுள்ளார். இதில் பலத்த காயமுற்ற ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சே.மோகன்ராம் (59) என்பவர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் மகேந்திரனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.