28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வத்திராயிருப்பில் விவசாயக் கண்காட்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயக் கண்காட்சியை நடத்தினர். இக் கண்காட்சியை ஏராளமான விவசாயிகள், மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2014, 7:57 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயக் கண்காட்சியை நடத்தினர். இக் கண்காட்சியை ஏராளமான விவசாயிகள், மாணவர்கள் கண்டு பயனடைந்தனர்.

கண்காட்சியை வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் மாணவிகள் ஒருங்கிணைந்த பண்ணையம், திருந்திய நெல் சாகுபடி, சூரிய ஒளி மூலம் தண்ணீர் பாய்ச்சுதல், தென்னையில் சொட்டு நீர், பட்டுப்புழு வளர்க்கும் முறை, திரவ நுண்ணுயிர் உரம் பயன்படுத்தும் முறை, உவர் நிலத்தை மேம்படுத்துதல், பாலி மல்சிங், இயற்கை வேளாண்மை, மஞ்சள் ஒட்டுப்பொறி பயன்படுத்தும் முறை உள்ளிட்ட விவசாய தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும் வகையில் மாதிரிகளை செய்திருந்தனர்.

மேலும் மண் மாதிரி எடுக்கும் முறை, விதை நேர்த்தி, அசோலா தயாரிக்கும் முறை, தென்னை டானிக், தென்னை மற்றும் வாழையில் அடர் நடவு, மஞ்சணத்தி மற்றும் பார்த்தீனியம் அழிக்கும் முறை, குழித்தட்டில் காய்கறிகளை சாகுபடி செய்யும் முறை உள்ளிட்டவற்றை வரைபடமாக வரைந்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

பருத்தியில் கூண்வண்டு தாக்குதல், தென்னையில் காண்டாமிருக வண்டு, நுண்ணூட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தத மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
கண்காட்சியை 215 விவசாயிகள் மற்றும் இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரங்காராவ் லயன்ஸ் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளின் மாணவ மாணவியர், பொதுமக்கள் கண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாணவிகள் ஷீனா ஐசக், அபிராமி, மணிமேகலை, இந்துமதி, பிரியங்கா, வளர்மதி, விமல்ராணி, விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.