/

கார் விபத்தில் கேரள வாலிபர் பலி

கேரள மாநிலம் கோழிக்கோடு பால்சேரியை சேர்ந்தவர் அசரப் மகன் நியாஸ்(20).  இவரது நண்பர்கள் டோட்டலி போஸ்ட்டை சேர்ந்த பசீர் மகன் நவீன்(19), கண்ணூர் மாவட்டம் கருவூஞ்சல் பென்னி மகன்

News image
Updated On :6 டிசம்பர் 2014, 2:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே கார் விபத்தில் கேரள வாலிபர் பலியானார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பால்சேரியை சேர்ந்தவர் அசரப் மகன் நியாஸ்(20).  இவரது நண்பர்கள் டோட்டலி போஸ்ட்டை சேர்ந்த பசீர் மகன் நவீன்(19), கண்ணூர் மாவட்டம் கருவூஞ்சல் பென்னி மகன் அருண் பென்னி(22), ஜாபர் அகிலன்.  இவர்கள் அனைவரும் கோவையில் தனியார் கல்லூரியில் பயில்கின்றனர்.  சனிக்கிழமை காலை கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக குவாலிஸ் காரில் கிளம்பியுள்ளனர்.  காரை நவீன் ஓட்டியுள்ளார்.  பழனியை அடுத்த பழனி-உடுமலை சாலையில் காளீஸ்வரி மில் அருகே கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து மரத்தில் மோதியது.  இதில் வாலிபர் நியாஸ் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.  மற்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். 

விபத்து குறித்து அருண்பென்னி கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.