4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19

News image
Updated On :10 டிசம்பர் 2014, 10:22 am

குமார்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராமசாமி (44) என்பருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராமசாமி தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சாமியாத்தாள் கணவரிடம் கோபித்து கொண்டு கடுதாம்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து ராமசாமி மனைவியை குடும்பம் நடத்த பலமுறை சென்று அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ராமசாமி செவ்வாய்க்கிழமை இரவு மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது மாமியார் அருக்காணி உன்னுடன் இனிமேல் அவள் குடும்பம் நடத்த வரமாட்டாள் என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அருக்காணியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அருக்காணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தப்பி சென்ற ராமசாமியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவலூர் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.