/

பழனியருகே கார் டிரைவரை தாக்கி காரை கடத்தி சென்றவர்கள் கைது

தேனி மாவட்டம் கேஆர்ஆர் நகரை சேர்ந்தவர் மொக்கையதேவர் மகன் முத்துச்சாமி(55).  வாடகைக்கார் ஓட்டுனரான இவர் கடந்த திங்கள்கிழமை தேனியில் இருந்து பழனிக்கு காரில் வரும் போது காரில்

News image
Updated On :11 டிசம்பர் 2014, 1:21 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியருகே கார் டிரைவரை தாக்கி காரை கடத்தி சென்றவர்களையும், கடத்தப்பட்ட காரையும் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.

தேனி மாவட்டம் கேஆர்ஆர் நகரை சேர்ந்தவர் மொக்கையதேவர் மகன் முத்துச்சாமி(55).  வாடகைக்கார் ஓட்டுனரான இவர் கடந்த திங்கள்கிழமை தேனியில் இருந்து பழனிக்கு காரில் வரும் போது காரில் பயணம் செய்த நான்கு வாலிபர்கள் பழனியை அடுத்த கணக்கன்பட்டி அருகே முத்துச்சாமியை தாக்கி கார் மற்றும் காரில் இருந்த ரொக்கம் ரூபாய் இருபத்தையாயிரத்தை கடத்தி சென்றனர்.  பலத்த காயமடைந்த முத்துச்சாமி பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுவிட்டு மதுரைக்கு கொண்டு சென்றனர். 

இந்நிலையில் இந்த வழக்கை பதிவு செய்த ஆயக்குடி போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். தேடுதல் வேட்டையின் போது கடத்தப்பட்ட கார் ஈரோடு பகுதியில் இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் அங்கு சென்ற போது ஈரோடு மாவட்டம் சித்தோடு பொங்கம்பாளையம் என்ற இடத்தில் கார் இருந்ததைத் தொடர்ந்து காரைக் கைப்பற்றி அங்கு மறைந்திருந்த நான்கு பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பொங்கம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி(22) என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். காதல் திருமணம் செய்த இவரை மனைவி, குழந்தைகள் குடிப்பழக்கம் காரணமாக பிரிந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இவருக்கு மாமரத்துப்பாளையம் அம்மன் நகரை சேரந்த குருசாமி மகன் சஞ்சய்குமார்(21), வெள்ளப்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் நந்தகுமார்(19) மற்றும் குமிழான்பரப்பை சேர்ந்த அண்ணாத்துரை மகன் அஜீத்(17) ஆகியோர் பழக்கமாகியுள்ளனர்.  இவர்களில் சஞ்சய்குமார் மைக்செட் வேலையும், மற்ற இருவரும் பனியன் கம்பெனியிலும் வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் குடித்து விட்டு, வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளனர். மேலும், விரைவாக பணக்காரராக திட்டமிட்டதில் கார்களை கடத்தி விற்கலாம் என தீர்மானம் செய்துள்ளனர். அதன்படி ஈரோட்டில் இருந்து தேனி சென்று அங்கு இரவு நேரத்தில் ஒரு காரை வாடகைக்கு பேசி எடுத்து வந்து கணக்கன்பட்டி அருகே கார் டிரைவரை தாக்கி காரை கடத்தியுள்ளனர்.  மூன்று இடங்களில் காரை நிறுத்தியும் போதிய வசதி இல்லாத நிலையில் கணக்கன்பட்டி அருகே ஆளரவம் இல்லாத இடத்தில் டிரைவரை தாக்கி காரை கடத்தியதாக அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இதில் அஜீத் 17 வயதுடையவர் என்பதால் சிறார் சிறைக்கு செல்லவுள்ளார்.

காரும், காரை கடத்தியவர்களும் பிடிபட்டதைத் தொடர்ந்து தேனியை சேர்ந்த ஏராளமானோர் ஆயக்குடி காவல் நிலையம் முன்பு வியாழக்கிழமை குவிந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.