அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூர் விவசாயிகள் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சு வார்த்தை

பெரியாறு பாசன கடை மடை பகுதி விவசாயிகள் போதிய தண்ணீர் விநியோகிக்க கோரி மேலூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :12 டிசம்பர் 2014, 6:50 am

தர்மராஜ்

பெரியாறு பாசன கடை மடை பகுதி விவசாயிகள் போதிய தண்ணீர் விநியோகிக்க கோரி மேலூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரையில் இருந்து வட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை மாட்டுத்தாவணி அருகில் இருந்தும் கொட்டாம்பட்டி 4 வழிச் சாலையில் இருந்தும் நத்தம் சாலை வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

பெரியாறு பிரதான கால்வாய் தனியாமங்கலம் மதகுக்கு கீழ் உள்ள வெள்ளனூர் உரங்கான்பட்டி அம்பலகாரன் பட்டி, கோட்டநத்தம்பட்டி, சருகுவளையபட்டி பகுதிகளுக்கு கால்வாய்களில் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை.

விநாடிக்கு 220 கனஅடி தனியாமங்கலம் மதகில் இருந்து தண்னீர் விநியோகிக்க வேண்டும் ஆனால் பாதி அளவு தன்ணீர் தான் வெளியாகிறது பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்ட போதிலும்  கடைமடை பகுதிக்கு தண்ணீர் போதிய அளவு வந்து சேரவில்லை இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடந்துள்ளது.

நேரடி கால்வாய் பகுதியில் நடவு முடிந்து விட்டன பல்வேறு பாசனகுளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளதால் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வெள்ளனூர் வட்டார மக்கள் திரண்டு வந்து மேலுர் திருச்சி  4 வழிச் சாலையில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகார்கள் அங்கு வந்து விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதே போன்று மேலூர் திருச்சி 4 வழிச்சாலையில்  கொட்டாம்ப்டட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மேலவளவு கால்வாய் கீழ்தும்ப பட்டி, மணப்பட்டி, சைலம்பட்டி, கச்சிராயன்பட்டி வஞ்சிநகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க கோரி  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.