ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருச்சி அருகே வேன்-அரசுப் பேருந்து மோதல்: ஐயப்ப பக்தர் சாவு, 22 பேர் காயம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற வேனும், எதிரே வந்த அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 22 பேர் பலத்த காயமடைந்தனர்.

Updated On :14 டிசம்பர் 2014, 4:09 pm

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே லாரியை முந்திச்செல்ல முயன்ற வேனும், எதிரே வந்த அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 22 பேர் பலத்த காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூர் அருகேயுள்ள உப்பியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (22). வேன் ஓட்டுநர். சபரிமலை கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்திருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியிலிருந்து உப்பியங்குடிக்கு தனது வேனை ஓட்டிச் சென்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே சென்ற போது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியையும், வேனையும் முந்திச் செல்ல அவர் தனது வேனை இடதுபக்கம் திருப்ப முயன்றார்.
அப்போது அறதாங்கிலியிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து வேன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமேரசன் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தையும், பேருந்தினுள் பலத்த காயத்துடன் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.