தொடர்ந்து மேளதாளம் முழங்க கலசங்கள் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான லிட்டர் பால், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. பழனி அருகே அ.கலையமுத்தூர் அருள்மிகு கல்யாணி அம்மன் சமேதர் கைலாசநாதர் சன்னதியில் உள்ள சனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது. இருகோயில்களின் சனிப்பெயர்ச்சி பூஜைகளின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சோமனூர் எஸ்கேவிஎம் குழும நிறுவனர் முருகசாமி, ஆடிட்டர் சரோஜினி, அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், லட்சுமணன், தங்கராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.