கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாராளமய பொருளாதார கொள்கையே நாட்டின் ஏற்றத்தாழ்வுக்கு காரணம்: ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியாவை மையப்படுத்தி உற்பத்தி என்ற பாஜகவின் கொள்கையால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று அமித்ஷா கூறி வருகிறார். ஆனால், இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 1 சதம்

News image
Updated On :21 டிசம்பர் 2014, 12:28 pm

முத்துகுமார்

இந்தியாவின் ஏற்றத்தாழ்விற்கு தாராளமய பொருளாதார கொள்கையே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 21 வது மாநாடு நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டை கட்சியின் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவை மையப்படுத்தி உற்பத்தி என்ற பாஜகவின் கொள்கையால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று அமித்ஷா கூறி வருகிறார். ஆனால், இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 1 சதம் அதாவது 1 கோடியே 20 லட்சம் பேரிடம் மொத்த சொத்தில் 49 சதவீதம் உள்ளது. மீதி உள்ள 99 சதமான 118 கோடியே 80 லட்சம் பேரிடம் 51சதவீதம் சொத்துகள் மட்டுமே உள்ளன. இது, பிரபிர் புர்க்காயஸ்த் என்ற அறிஞரின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 1991 ம் ஆண்டு முதல் காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டுக்கொண்டு அமல்படுத்தி வந்த தாராளமய பொருளாதார கொள்கையால்தான் இந்தியாவில் இந்த ஏற்ற தாழ்வுகள் அதிகரித்துள்ளன.நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காப்பீட்டுதுறையில் 49 சதவீதம் அன்னியரை கொண்டு வரும் மசோதாவை நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். இந்த மசோதாவை தாயரித்தது காங்கிரஸ் தான். 50 ஆண்டுகளுக்கு மேலாக அமுலில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை திருத்தி வருகின்றனர். இது போன்ற சட்டங்களை திருத்துவதற்கு காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் பாரபட்சம் இல்லாமல் ஆதரிக்கின்றனர்.

சென்னையில் பாஸ்ட்ரான் நிறுவனத்தை மூடுவதற்கு எதிரான சிஐடியுவின் போராட்டத்திற்கு கட்சி ஆதரவளிக்கும்.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை முடக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.  உழைப்பாளர்கள் மீது பொருளாதார தாக்குதல் வரும் போது ஒன்று திரண்டு போராட முற்படும் போது, அதனை தடுக்கவும், ஒற்றுமையை சீர் குலைக்கும் முயற்சிகளை பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது.  இது போன்ற செயல்களை மார்க்சிஸ்ட் கட்சி உயிரைகொடுத்தாலும் தடுத்து நிறுத்துவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.