/

பழனிக்கோயில் வின்ச்சுகள் புதிய மின்மாற்றிக்காக நாளை நான்கு மணி நேரம் நிறுத்தம்

பழனி மலைக்கோயிலுக்கு படிவழிக்கு மாற்றாக முதன்முதலாக நிறுவப்பட்டது வின்ச் ஆகும்.  குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பயணம் செய்ய ஏதுவாக அமைந்ததால்

News image
Updated On :21 டிசம்பர் 2014, 10:52 am

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயில் வின்ச்சுகள் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி காரணமாக நாளை(திங்கள்கிழமை) நான்கு மணி நேரம் நிறுத்தப்படுகிறது.

பழனி மலைக்கோயிலுக்கு படிவழிக்கு மாற்றாக முதன்முதலாக நிறுவப்பட்டது வின்ச் ஆகும்.  குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் பயணம் செய்ய ஏதுவாக அமைந்ததால் பக்தர்கள் மத்தியில் வின்ச் பெரும் வரவேற்பை் பெற்றது.  தற்போது மூன்று பாதைகளில் வின்ச் இயக்கப்பட்டு வருகிறது.  பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டு வருடம்தோறும் வின்ச் வடக்கயிறுகள் பெங்களூரு விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு அவ்வப்போது மாற்றப்படுகிறது.  தற்போது வின்ச் இயக்கத்துக்காக 500 கேவிஏ மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது.  இந்த மின்மாற்றி போதியதாக இல்லாத நிலையில் கூடுதலாக 500 கேவிஏ தற்போது நிறுவப்பட்டுள்ளது.  இதற்கு இணைப்பு கொடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. 

இதற்காக மின்இணைப்பு நிறுத்தப்படுவதால் நாளை(திங்கள்கிழமை) மதியம் ஒரு மணி முதல் ஐந்து மணி வரை மூன்று வின்ச்சுகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது.  வின்ச் இயக்கம் நிறுத்தப்பட்டாலும், பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் வழக்கம் போல இயக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.