பழனியில் குவிந்த கூட்டம்: ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதி
பழனியில் கார்த்திகை மாதம் முதலே பக்தர்கள் கூட்டம் அளவின்றி வந்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு மலைக்கோயிலில் அதிகாலை முதலே கோயில் திறக்கப்பட்டு பூஜைகள்


பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்களால் கிரிவீதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பழனியில் கார்த்திகை மாதம் முதலே பக்தர்கள் கூட்டம் அளவின்றி வந்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு மலைக்கோயிலில் அதிகாலை முதலே கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் குவிந்ததால் கிரிவீதியில் கடும் ஜனநெரிசல் ஏற்பட்டது. மலைக்கோயிலை சுற்றி அகலமாக கிரிவலப்பாதை இருந்தாலும் பாதையின் இருபக்கமும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை போட்டு பக்தர்கள் நடக்க முடியாத நிலைக்கு பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றியிருந்தனர். கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்பால் பக்தர்கள் நடக்கமுடியாத நிலை இருந்தாலும், இந்த கடைக்காரர்கள் போடும் குப்பைகளாலும், கடைகளிலும் மறைப்பை கழிப்பிடங்களாக பயன்படுத்துவதாலும் கிரிவீதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கிரிவீதியில் உள்ள கடைகளுக்கு முறைகேடாக மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆங்காங்கே ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளது. இதிலிருந்து வயர்கள் தாறுமாறாக கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிரிவீதி ஆக்கிரமிப்பை பல்வேறு துறை நிர்வாகங்களும் அகற்றுவதாக பணி மேற்கொண்டாலும், அடுத்த நிமிடமே அதே பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. பல்வேறு துறை அதிகாரிகளும் காவல்துறையின் மெத்தனம் காரணமாகவே இந்த ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது என்றும், இதற்கு போலீஸார் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆகவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்கள் நலனில் அக்கறை செலுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...