நெல்லை மாவட்டத்தில் 41,680 ஹெக்டேரில் நெல் நடவு: வேளாண் இணை இயக்குநர்
திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் பிசான பருவத்தில் 41,680 ஹெக்டேரில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்ய வேண்டியுள்ளதாக வேளாண்


திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் பிசான பருவத்தில் 41,680 ஹெக்டேரில் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்ய வேண்டியுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் செ. சந்திரசேகரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் செ. சநதிரசேகரன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்திருப்பதால் தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் 65,000 ஹெக்டேரில் நெல் பயிர் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 41,680 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரம் ஹெக்டேரில் நடவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும் சோளம், கம்பு ஆகியன தலா 110 ஹெக்டேரிலும், மக்கா சோளம் 9,020 ஹெக்டேரிலும், 27 ஆயிரம் ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.துவரை சாகுபடி 1,150 ஹெக்டேரில் நடவு முறையில் பயிரிடப்பட்டுள்ளது.தற்போது உளுந்து, பாசிப்பயறு பயிர்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட நிகழ் பருவத்தில் இவ்விரு தான்யங்களும் ஹெக்டேருக்கு 1,000 கிலோ வரை மகசூல் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட 100 சதவீதம் மகசூல் அதிகமாகும்.
இதேபோல் பருத்தி சாகுபடியும் கடந்த ஆண்டை விட 100 சதவீதம் அதிகரித்துள்ளது. கரும்பு சாகுபடி வழக்கத்தை விட 400 ஹெக்டேர் குறைந்துள்ளது. இப்பாசனத்தில் பயறு வகைகளுக்கு இலை வழியாக உரம் தெளிக்கும் முறையை பின்பற்றி சாகுபடி செய்யப்பட்டதால் கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது.
இம்மாவட்டத்தில் நீரில் கரையும் உரங்களை நெல் பயிருக்கு இலை வழியாக உரமிடும் முறையை பரிசாத்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ் பருவத்தில் வழக்கத்தை விட பருவ மழை அதிகமாக பெய்துள்ளதால் நெல், பயறு வகைகள், தான்ய உற்பத்தி அதிகரித்துள்ளது என்றார் அவர்.
உபரிநீர் 3,000 கனஅடி திறப்பு: திங்கள்கிழமை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரிநீர் 2,000 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 900 கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,125.22 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,380 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.40 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 84.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும் இருந்தது. பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையில் பெருங்கால் மதகில் 35 கனஅடியும், பிரதான கால்வாயில் 445 கனஅடியும், கடனாநதி அணையில் இருந்து 110 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...