மின்பாதையில் நெல்லைக்கு முதல் ரயில் இயக்கம்: பயணிகள் வரவேற்பு
மின்பாதையில் திருநெல்வேலிக்கு முதல் பயணிகள் ரயில் திங்கள்கிழமை இயக்கப்பட்டது. திருச்சியிலிருந்து இயக்கப்பட்ட இந்த இன்டர்சிட்டி ரயில் பிற்பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலி


மின்பாதையில் திருநெல்வேலிக்கு முதல் பயணிகள் ரயில் திங்கள்கிழமை இயக்கப்பட்டது. திருச்சியிலிருந்து இயக்கப்பட்ட இந்த இன்டர்சிட்டி ரயில் பிற்பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலி வந்தடைந்தது. இந்த ரயிலுக்கு தொழில் வர்த்தக கழகம், பயணிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பபட்டது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரை மின்சார ரயில் இயக்கும் வகையில் மின்மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மதுரை வரை ஏற்கனவே இப்பணி முடிவடைந்த நிலையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. விருதுநகரிலிருந்து திருநெல்வேலி, மணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வரையில் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை அடுத்து அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார்மிட்டல் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து திருநெல்வேலிக்கு மின்பாதையில் திங்கள்கிழமை முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. திருச்சியிலிருந்து இன்டர்சிட்டி ரயில் காலை 7.15 புறப்பட்டது. பிற்பகல் ஒரு மணிக்கு திருநெல்வேலிக்கு ரயில் வந்தடைந்தது. பிற்பகல் 2.15 மணிக்கு மறுமார்க்கத்தில் இன்டர்சிட்டி ரயில் திருநெல்வேலியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட தொழில் வர்த்தக கழகம், பயணிகள் நலச் சங்கம் சார்பில் ரயிலை இயக்கிய ஓட்டுநர்கள் ஆர். சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில், நிலைய மேலாளர் வி.எம், செல்லத்துரை, தொழில் வர்த்தக கழக துணைத் தலைவர் எஸ். சந்திரமெளலி, நிலைய வளர்ச்சி ஆலோசனைக்குழு உறுப்பினர் சங்கரகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ரயிலில் வந்த உதவி கோட்ட மின்பொறியாளர் ஏ. ராமச்சந்திரன் கூறியதாவது:
மின்பாதையில் திருநெல்வேலிக்கு முதல் முறையாக சோதனை முறையில் திருச்சி இன்டர்சிட்டி பயணிகள் இயக்கப்பட்டது. இந்த ரயில் வெற்றிகரமாக நெல்லை வந்தடைந்தது என்றார் அவர்.
டிச. 27 முதல் மின்சார ரயில்:
மின்பாதையில் சோதனை முறையில் பயணிகள் இயக்கப்பட்டதை அடுத்து டிச. 27 ஆம் தேதி முதல் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி, அனந்தபுரி விரைவு ரயில்களும் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...