சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவம் நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் ச.நடராஜ சுப்ரமணிய தீட்சிசர் கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலாவுடன் உற்சவம் நடைபெறுகிறது. திருவிழா 10 நாட்களும் சாயரட்சை பூஜையில் சித்சபையில் மாணிக்கவாசகப் பெருமான் எழுந்தருளிச்செய்து திருவெம்பாவை உத்சவம் நடைபெறுகிறது.
ஜன.4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 ணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும்
நடைபெறுகிறது. ஜன.6-ம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உத்சவ ஏற்பாடுகளை கோயில்
பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர், துணைச் செயலாளர் என்.எஸ்.மணி தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

200-க்கும் அதிகமான தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

