நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசியல் கட்சி சின்னங்கள் வரையப்பட்ட  200 வாகனங்களில் நெம்பர் பிளேட்டுகளை மாற்றிய அதிகாரிகள்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின்போது, 200 இருசக்கர வாகனங்களில் இருந்த கட்சிச் சின்னங்கள் அடங்கிய நம்பர் பிளேட்டுகள்

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 2:17 pm

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் சனிக்கிழமை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வின்போது, 200 இருசக்கர வாகனங்களில் இருந்த கட்சிச் சின்னங்கள் அடங்கிய நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட்டன.

திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்துத் துறையினர், திருவண்ணாமலை போக்குவரத்துக் காவல் துறையினர் இணைந்து சனிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் அரசியல் கட்சி சின்னங்கள், பதிவெண்ணைத் தவிர தேவையில்லாத வாசகங்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.

இவ்வாறு கண்டறியப்பட்ட 200 வாகனங்களின் நெம்பர் பிளேட்டுகள் உடனடியாக மாற்றி புதிய நெம்பர் பிளேட்டுகளை அதிகாரிகளே பொறுத்தினர். இதற்குண்டான செலவுத் தொகையை வாகனத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

இதேபோல, புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடுக்கான சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 4 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.