ஊதியம் வழங்காததை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலைமறியல்
ஜயங்கொண்டம்,பிப்.1: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்காத


ஜயங்கொண்டம்,பிப்.1: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து பணியாளர்கள் வெள்ளிகிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஷ்ரீராமன் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிசெய்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் வங்கி கணக்கில் ஊதியம் செலுத்தப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கான ஊதியம் வங்கியில் செலுத்தப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜயங்கொண்டம் விருதாசலம் சாலையில் அமர்ந்து சாலை மறியிலிóல் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த துணை ஆமையர்கள் முருகானந்தம், நாராயணன், அருள்சாமி ஆண்டிமடம் காவல் உதவி ஆய்வாளர் அழகிரி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தில் விரைவில் அவர்களுக்கான ஊதியத்தை வங்கியில் செலுத்த நடவடிக்கை மேற்க்கொள்வதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...