யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் அருகே ரூ.40 லட்சம் நில மோசடி: இருவர் கைது

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆசிரியைக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக விவசாயிகள் இருவர் சனிக்கிழமை கைது

News image
Updated On :1 பிப்ரவரி 2014, 2:24 pm

தங்கராஜா

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆசிரியைக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக விவசாயிகள் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சேலம் பட்டை கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை விஜயா. தனது குடும்பத்துக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் அண்மையில் இவர் புகார் அளித்திருந்தார்.

 இது குறித்து நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. முனியப்பன், ஆய்வாளர் சண்முகய்யா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், விஜயாவுக்கும் அவரது சகோதரிகளுக்கும் கடந்த 1982-ல், அவரது தாய் வழித் தாத்தா சின்ன இருசான் 10 சென்ட் நிலத்துக்கு அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.

 இதற்காக பணம் செலுத்தப்பட்டிருந்தும், 5 ஆண்டு கிரய ஒப்பந்த காலம் முடிவடைந்தும் சின்ன இருசான் கிரயம் செய்து கொடுக்கவில்லையாம். இதை எதிர்த்து விஜயா, அவரது சகோதரிகள் சங்ககிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் விஜயா தரப்புக்கு சாதகமாக கடந்த 2006-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

 இந்த நிலையில் சின்ன இருசானின் உடன் பிறந்த சகோதரியின் வாரிசுகளான பெரியசாமி, சின்னசாமி உள்ளிட்டோர், அந்த சொத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 இதற்கிடையே ராவணன் என்பவர் மேற்படி பெரியசாமி, சின்னசாமி தரப்பினருக்கு உரிமை இல்லாத நிலத்துக்கு உரிமை இருப்பதாகக் காட்டி, போலியான ஆவணங்களைத் தயாரித்து கிரயம் பெற்றுள்ளார். இதையடுத்து அனைவரும் விஜயா தரப்பினரின் அனுபவத்தில் இருந்த நிலத்துக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அத்துமீறி நுழைந்து அபகரித்துக் கொண்டனர்.

 இதையடுத்து விஜயாவின் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததற்காக பெரியசாமி (65), சின்னசாமி (45) இருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ராவணன் உள்ளிட்ட மேலும் 4 பேர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சகோதரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.