இலங்கை சைவ சிந்தாந்த பள்ளி மாணவர்கள் நடராஜர் கோயிலுக்கு வருகை!
இலங்கை யாழ்பாணத்தில் உள்ள திருவாவடுதுறை சைவ சித்தாந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து சாமி


இலங்கை யாழ்பாணத்தில் உள்ள திருவாவடுதுறை சைவ சித்தாந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவாவடுதுறை ஆதீன மடத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று சைவ சித்தாந்த பட்டம் பெறுவதற்காக யாழ்ப்பாணம் சைவ சிந்தாந்த வகுப்பு கிளை அமைப்பாளர் செல்லையா நவநீதகுமார் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தனர். உ.வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் அவர்களை வரவேற்று சிறப்பு தீபாராதனை செய்து பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...