அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி துணைத் தலைவர் கைது

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் சந்திரன்(40). இந்த நகருக்கு அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உசிலம்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள்

Updated On :3 பிப்ரவரி 2014, 9:34 am

விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் சந்திரன்(40). இந்த நகருக்கு அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உசிலம்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பாண்டியன் நகரில் இடத் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தை சொந்தம் கொண்டாடடுவதில் மறுபடியும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இடம் எனக்குறியது என்றும், மீறினால் கொலை செய்து விடுவதகாவும் கூறி சந்திரனை மிரட்டினாராம். உடனே இது தொடர்பாக பாண்டியன் நகர்காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். அதன் பேரில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரமேஷ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.