ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வலியுறுத்தியும், புதிய மசோதாவை திருத்தங்களுடண் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த கோரியும், 40 சதவீத ஊனத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்,

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 11:36 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வலியுறுத்தியும், புதிய மசோதாவை திருத்தங்களுடண் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த கோரியும், 40 சதவீத ஊனத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், உதவித்தொகை பெற உள்ள கடும் விதிமுறைகளை தளர்த்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜ்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜே.ராஜா, கே.ராமநாதன், கே.பாக்கியராஜ், ஆர்.முருகப்பாண்டியன், ஏ.நாகராஜ், ஆர்.எழுமலை, கே.செந்தில், வி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் டி.லட்சுமணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.உதயக்குமார், மாநிலக்குழுவைச் சேர்ந்த ஆர்.இளங்கோவன், ஆர்.ஆளவந்தார், மாவட்டத் தலைவர் டி.ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.