சிதம்பரத்தில் 25-வது ஆண்டு மலர் கண்காட்சி தொடக்கம்!
சிதம்பரம் மாரியாப்பாநகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 25-வது ஆண்டு மலர் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சிய மார்ச் 2-ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 6


சிதம்பரம் மாரியாப்பாநகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 25-வது ஆண்டு மலர் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சிய மார்ச் 2-ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கண்காட்சியில் மணமுள்ள ரோஜா (Scented Rose), கறுப்பு ரோஜா (Black Rose), மிகப்பெரிய டச் ரோஜா (Dutch Rose), பட்டன் ரோஜா, மஞ்சள் ரோஜா, பூத்து 7 நாட்கள் வரை இருக்கு 7 Days Rose, பன்னீர் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ண ரோஜாக்கள், சாமந்தி, செவ்வந்தி, புதுவகை செம்பருத்திச் செடிகள், மல்லிரை ரகச் செடிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் 9 வகை ஒட்டு மாங்கன்றுகள், சிவப்பு, வெள்ளைக் கொய்யா, ஒட்டுப்பலா, ஒட்டு எலுமிச்சை, ஒட்டு நெல்லி, சாத்துக்குடி, பம்ப்ளிமாஸ், விதையில்லா மாதுளை, சப்போட்டா, செவ்வாழை, ரஸ்தாளி, லவங்கம், மிளகு, வெற்றிலை உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் வாஸ்து செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், வல்லாரை, தூதுவளை, இன்சுலின் போன்ற மக்கள் பயன்பெறும் மருந்து செடிகளும் உள்ளது. தோட்டம் அமைக்க இயற்கை உரங்கள், தோட்டக்கருவிகள், செடிகளுக்கு ஏற்ற மண் ஆகியவையும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. செடிகள் 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன என கண்காட்சி அமைப்பாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் வேளாண்துறை பேராசிரியர் ஆர்.எம்.நாச்சியப்பன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...