தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகும் "கோச்சடையான்"

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 2:29 pm

வேல்முருகன்

இந்தியாவில் முதல்முறையாக  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படத்தை அவரது மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். இந்த படம்  எப்போது வெளியாகும்  என உலகம் முழுவதும உள்ள ரஜினி ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மிக ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் கோச்சடையான் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 11, 2014 என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிய மற்றும் ப்ரெஞ்சு மொழிகளில் வெளியாகிறது. ஆங்கிலத்தில் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் தனியாக வெளியிடவும் ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.