என்எல்சியில் பணிபுரியும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க உள்ளனர்.
என்எல்சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் 17வது வட்ட அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் நெய்வேலியில் அண்மையில் நடைபெற்றது. ஐஎன்டியுசி ஒப்பந்த சங்க சிறப்பு தலைவர் சுகுமார் தலைமை வகித்தார்.
ஒப்பந்த தொமுச, ஐஎன்டியுசி, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம், ஏஐடியுசி, பிஎம்எஸ், தமிழக வாழ்வுரிமை தொழிற்சங்கம் ஆகியவைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும் 10 ஆம் தேதி என்எல்சி நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி 6ஆம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வதெனவும், ஆர்ப்பாட்டம் குறித்து 5ஆம் தேதி சிஐடியு அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

