சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் குருபிரசாத் (21). இவர் விருத்தாசலம் தனியார் கல்லூரியில் பிபிஏ பட்டம் பயிலுகிறார் முதுகலை பட்டப்படிப்பு பயின்று


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் குருபிரசாத் (21). இவர் விருத்தாசலம் தனியார் கல்லூரியில் பிபிஏ பட்டம் பயின்று வந்தார்.இந்நிலையில் திங்கள்கிழமை மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பு நோக்கி சென்றுள்ளார். அப்போது ஆணைவாரி எனுமிடத்தில் அரசு பஸ் மோதியதில் குருபிரசாத் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். கவலைக்கிடமான நிலையில் இருந்த குருபிரசாத்தை சேத்தியாத்தோப்பு போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் குருபிரசாத் இறந்தார்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...