கூட்டத்தில் அதிமுக மீனவர் பிரிவு மாநில செயலாளரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம் (புவனகிரி), நாக.முருகுமாறன் (காட்டுமன்னார்கோயில்), முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, சிதம்பரம் தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் சந்திரசேகர், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், கீரப்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஆர்.ஜெயபாலன், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தொகுதி செயலாளர் பி.எஸ்.அருள் நன்றி கூறினார்.