/

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு: 4 பேர் படுகாயம்

சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை அன்று மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்து கடலூர் மற்றும்

News image
Updated On :7 பிப்ரவரி 2014, 1:31 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை அன்று மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்து கடலூர் மற்றும் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (37). இவரது ஊரில் கோயிலில் லட்சதீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அருகே வாண்டையான்பாளையத்தில் உள்ள தனது தங்கை கோமதி (30), அவரது மகன் பிரவீன் (10), மகள் ஷரீஷ் விஸ்வரூபா (8) ஆகிய மூவரை தனது டிவிஎஸ் மொபெட்டில் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற கார் மோதியதில் நால்வரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தில் படுகாயமுற்ற கோமதி, கார் டிரைவர் சாமுவேல் ஆகிய இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் பிரவீன், ஷரீஸ் விஸ்வரூபா ஆகிய இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிதிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.