வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லையில் பிப். 16 ல் சமத்துவ மக்கள் கட்சி மாநில மாநாடு: பந்தல் அமைக்கும் பணி தொடக்கம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 2 ஆவது மாநில மாநாடு பிப். 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி பொருட்காட்சித் திடலில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும்

News image
Updated On :9 பிப்ரவரி 2014, 9:15 am

ஷேக் அப்துல்காதர்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 2 ஆவது மாநில மாநாடு பிப். 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி பொருட்காட்சித் திடலில் நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதிமுக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2011 ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தென்காசி, நான்குனேரி தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணியில் நீடிக்கும் இக்கட்சி மக்களவைத் தேர்தலையொட்டி தனது கட்சியின் பலத்தை நிருபிக்கும் வகையில் திருநெல்வேலியில் வரும் பிப். 16 ம் தேதி 2 ஆவது மாநில மாநாட்டினை நடத்துகிறது.

திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பணியினை கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆ. நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஏ.என். சுந்தரேசன், மாநில கலை இலக்கிய அணிச் செயலர் விவேகானந்தன், மாநில தொழிற்சங்கத் தலைவர் ஆர். சுதாகர்,தென்மண்டல செயலர் என். சுந்தர், மாநகர் மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ், கிழக்கு மாவட்டச் செயலர் லாரன்ஸ், மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ், தொகுதிச் செயலர்கள் எம்.கணேசன், வழக்குரைஞர் எஸ். கணேசன், மாவட்ட அவைத் தலைவர் பஷீர், மாவட்ட துணைச் செயலர் சரத்ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலர் நட்சத்திரவெற்றி, மகளிரணி செயலர் ஷேசம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாடு நிகழ்ச்சிகள்: வரும் பிப். 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறும் மாநாட்டுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி. செல்வராஜ் தலைமை வகிக்கிறார். கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றுகிறார். கட்சியின் துணைத் தலைவர் ஆ. நாராயணன் எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசகர் ராதிகாசரத்குமார், பொதுச்செயலர் கரு. நாகராஜன், மாநில கொள்கைபரப்பு செயலர் ஆர். ஜெயபிரகாஷ், பொருளாளர் சுந்தரேசன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், கட்சியின் கேரளா, புதுச்சேரி மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

பிரமாண்டப் பந்தல்: மாநாட்டில் 60 க்கு 32 அடி என்ற அளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது. மாநாட்டுத் திடலில் சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டப் பந்தல் அமைக்கப்படுகிறது எனக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.