இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக, சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு செய்துவிடுகின்றனர். மேலும், "அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான பதிவெண்களை அவரே ஒதுக்கீடும் செய்கிறார். இந்த புதிய முறை மூலம் வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்கிறார் கல்வித்துறை அதிகாரி.