ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சிதம்பரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருந்தன!
ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் பிப்.10,11 ஆகிய இருநாட்கள் தேசிய அளவில், தேசிய


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் சிதம்பரத்தில் பாரதஸ்டேட் வங்கி, இந்தியன்வங்கி உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் திங்கள்கிழமை மூடப்பட்டருந்தன.
ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் பிப்.10,11 ஆகிய இருநாட்கள் தேசிய அளவில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து சிதம்பரம் நகரில் இந்தியன்வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தனியார் வங்கிகள் இயங்கின. ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், திங்கள்கிழமை வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள், வங்கி மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் தொடர்ந்து வங்கி இயங்காததால் பொதுமக்களும், வியாபாரிகளும் வங்கி பரிவர்த்தனை இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...