தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் சூறாவளியில் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு ரூ.23.33 லட்சம் நிவாரணத்தொகை

இம் மாவட்டத்தில் கடந்த 14-4-2013 மற்றும் 15-4-2013 ஆகிய தேதிகளில் வீசிய சூறாவளிக் காற்றினால் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த

News image
Updated On :10 பிப்ரவரி 2014, 9:50 am

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டத்தில் சூறாவளி காற்றினால் வாழைகள் சேதமடைந்த 1364 விவசாயிகளுக்கு ரூ.23.33 லட்சம் நிவாரணத் தொகையை தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இம் மாவட்டத்தில் கடந்த 14-4-2013 மற்றும் 15-4-2013 ஆகிய தேதிகளில் வீசிய சூறாவளிக் காற்றினால் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி வட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிர்கள் சேதமடைந்தன.50 சதவிகிதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட 1364 விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 வீதம் மொத்தம் 311.14 ஹெக்டேருக்கு ரூ.23 லட்சத்து 33 ஆயிரத்து 550 நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.அந்தத் தொகை திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நிவாரணத் தொகை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. வங்கி்க் கணக்கு இல்லாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலரை தொடர்பு கொண்டு கணக்கு ஆரம்பித்துக் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டியல், நிவாரணத்தொகை விவரம் அடங்கிய பட்டியல் ஆகியவை 4 வட்டங்களிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.நிவாரணத்தொகையைப் பெற விவசாயிகள் தங்களது புகைப்படத்துடன் இருப்பிட ஆதாரம், சாட்சிகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் முன்பு ஆஜராகி பதிவேட்டில் புகைப்படத்தை ஒட்டி கையொப்பம்  செய்ய வேண்டும். புதிய கணக்கு தொடங்க எந்தவித முன்வைப்பு தொகையும் செலுத்த தேவையில்லை. விவசாயிகள் நிவாரணத்தொகை முழுவதையும் வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.