வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 2,400 பேர் பங்கேற்பு

வங்கிகள் சீர்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்

News image
Updated On :10 பிப்ரவரி 2014, 9:44 am

ஷேக் அப்துல்காதர்

வங்கிகள் சீர்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வங்கி ஊழியர்களுக்கான சம்பள 9 ஆவது இரு தரப்பு ஒப்பந்தம் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்து விட்ட நிலையில் 15 மாதங்களாகியும் 10 ஆவது இரு தரப்பு ஒப்பந்தம் குறித்து முடிவு எட்டவில்லை. வேலைநிறுத்தம் செய்யும் முன்பே தொழிற்சங்கங்களுடன் வங்கி ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய தொழிலாளர் ஆணையம் தெரிவி்த்தும் இந்திய வங்கிகள் சங்கங்கள் பேசவில்லை.

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். வங்கிகள் சீர்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். நாடு முழுவதும் வராக் கடனாக உள்ள ரூ. 3.50 லட்சம் கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட 9 அமைப்புகள் பிப். 10, 11 ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில தனியார் வங்கிகள் தவிர தேசிய மயமாக்கப்பட்ட 250 வங்கிகளும் மூடப்பட்டன. வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 2,400 க்கும் மேற்பட்ட அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வழங்கி அதிகாரிகள் சங்கம், தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர் சம்மேளனம், வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போாாட்டத்தினால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாத நிலை காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.