மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காங்கிரசுக்கு நெருக்கமான கட்சி தேமுதிக: ஞானதேசிகன்

காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த இரு நாள்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில்

News image
Updated On :11 பிப்ரவரி 2014, 2:17 pm

காங்கிரசுக்கு மிகவும் நெருக்கமான கட்சி தேமுதிக என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த இரு நாள்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனுக்களை பலர் ஞானதேசிகனிடம் நேரில் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காங்கிரஸ் சார்பில் பிப்ரவரி 10, 11 ஆகிய இரு நாள்கள் விருப்ப மனுக்கள் பெறப்படும் பிப்ரவரி 8-ஆம் தேதி தான் என அறிவித்தோம். ஆனாலும் 39 தொகுதிகளுக்கும் 1,200-க்கும் அதிகமானோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதனால் கடந்த இரு நாள்களாக சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த உற்சாகம் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கேட்டிருக்கும் தகவல் உண்மைதான். இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சந்திப்பு நடைபெறும்.

யாராலும் தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் பலம் வாய்ந்த சக்தியாக உள்ளது. உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களைவிட தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது.

கூட்டணி பேச்சு நடக்கிறது:

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்பதை இப்போது கூற முடியாது. உடன்பாடு ஏற்பட்டதும் அறிவிப்போம்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். வரும் மார்ச் மாதத்தில் அவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும்.

சென்னையில் மோடி பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் திரளப் போகிறார்கள் என்றார்கள். ஆனால் யாரும் வரவில்லை. கூட்டத்தால் வாக்குகளைப் பெற முடியாது என்பது தமிழகத்திஸ் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறித்த மோடியின் விமர்சனம் அநாகரிமானது. பிரச்னைகளைப் பற்றி பேசும் மோடி, அதற்கான தீர்வுகளை எங்கும் முன்வைக்கவில்லை.

மோடி சூறாவளி பிரசாரம் செய்வதாக ஊடகங்கள் சொல்கின்றன. சூறாவளி அழிவைத்தான் ஏற்படுத்தும். மோடி அழிவுக்கான பாதையில் செல்கிறார். வரும் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்றார் ஞானதேசிகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.