திருநெல்வேலியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவிற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். முழுநேர பணி நிரந்தரம் மற்றும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் ஆண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மலைவாழ் பணியாளர்களுக்கு மலைவாழ்படி, குளிர்காலப்படி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பயணப்படி வழங்க வேண்டும். பிற துறை தினக்கூலி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ராசையா தலைமை வகித்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.சுப்பிரமணியன், என்.முருகேசன், எஸ்.தாச்சாயனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் மாநிலப் பொருளாளர் ஜி.ஏசாயா குருபாதம் வரவேற்றார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கே.ராமையா, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ.ஜொஹராபாத்திமா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். எஸ்.பழனிச்சாமி, ராஜேஸ்வரன், வி.பார்த்தசாரதி, விநாயகசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...