தூத்துக்குடி நகைக்கடையில் கொள்ளை: போலீஸார் விசாரணை
தூத்துக்குடி காசுக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று இரவு கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-


தூத்துக்குடி காசுக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று இரவு கொள்ளை அடித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
தூத்துக்குடி நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை காசுக்கடை பஜாரரில் உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு சில மர்ம நபர்கள் முன்பக்க கதவை திறந்து கடையில் இருந்து சுமார் 10 கிலோ நகைகளை கொள்ளையடித்ததாக தெரிகிறது. திருடிச் செல்லும் வழியில் மோதிரம், செயின் போன்றவற்றை வீதியில் சிதற விட்டுள்ளனர்.
இன்று காலை நகைக்கடை திறந்து இருப்பதை பார்த்து போலீஸில் புகார் கூறப்பட்டது இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...