கரூர் அருகே மொபட் மீது அரசு பேருந்து மோதியதில் இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை பரிதாபமாக இறந்தார்.
கரூர் வடக்கு காந்திகிராமம் பெரியார் நகரைச்சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி கலைச்செல்வி(44). இவர் வியாழக்கிழமை காலை தனது குழந்தையை மொபட்டில் அழைத்துச்சென்று பள்ளி வேனில் அனுப்பியுள்ளார். அப்போது அவரது அக்காவின் மகள் வீட்டை பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு திருச்சி செல்ல போக்குவரத்து நகர் பேருந்து நிறுத்தத்தில் இருப்பதாக போனில் தகவல் கூறியுள்ளார். இதனால் கலைச்செல்வி மொபட்டில் போக்குவரத்து நகர் பேருந்து நிறுத்தத்திற்கு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மூலக்காட்டனூர் என்ற இடத்தில் சென்ற போது எதிரே சென்னையில் இருந்து கரூர் நோக்கி வந்த அரசு பேருந்து மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக கரூர் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநர் கரூர் மாவட்டம் காணியாளம்பட்டியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

