சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில், வனப் பகுதிக்குள் கேட்பாரற்று நின்றிருந்த 4 ஜீப்புகளை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு அடிவாரத்தில் இருந்து குண்டூர் மலைக் கிராமம் வழியாக மலையேறும் பயிற்சிக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் பாதையில், 4 ஜீப்புகளில் இளைஞர்கள் செல்வதாக அப்பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றபோது தனியார் பயன்படுத்தும் 4 ஜீப்புகள் கேட்பாரற்று நின்றிருந்தன.
இதையடுத்து தெற்கு வனச்சரகர் சிவக்குமார், வனவர்கள் ஹரிகிருஷ்ணன், மாதையன் ஆகியோர் அந்த ஜீப்புகளை மலையில் இருந்து கீழே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், கரடு முரடான மலைப் பாதைகளில் வாகனத்தை இயக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் நபர்கள், பயிற்சிக்காக இப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இருப்பினும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கும் வனப் பகுதிக்குள் சென்றதற்காக அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.