நடராஜர் கோயிலில் 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா: பிப்.27-ல் தொடக்கம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா பிப்.


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா பிப்.27-ம் தேதி வியாழக்கிழமை மாலை மகா சிவராத்திரியன்று தொடங்குகிறது. நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து மார்ச்.3-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
தெய்வீகத் தன்மையை உணர்த்தும் நாட்டியாஞ்சலி:
"நாட்டியாஞ்சலி" என்ற சொல் இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள பாரத நாட்டு பாரம்பரிய ஆடல் கலைஞர்களுக்கு பரவச உணர்வை ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. திருச்சிற்றம்பலம்-தில்லை-சிதம்பரம் எனப் பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆலயத்தில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நாளில் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி எனப்படும் ஆடல் திருவிழாவே இதற்கு காரணம்.
ஆன்மீகக் கோயிலாக மட்டுமின்றி ஆடல் கலையின் இலக்கணத்தை (108 கரணங்கள்) சிற்பமாக வடித்தும் அழியாத கலைக் கோயிலாக அமைந்துள்ளது. இவ்வாறு தமிழும், இசையும், கலையும் உயிராய் கலந்த இம்மண் தமிழர்களின் பண்பாட்டு சிகரமாய் விளங்கும் ஆடல் கலையின் தெய்வீகத் தன்மையை மீண்டும் உணர்த்த எழுந்த ஒரு முயற்சியே நாட்டியாஞ்சலி பெருவிழா.
இந்த மாற்றத்தை நெறிபடுத்த வேண்டும் என்ற உணர்வோடு அறிஞர்களான டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கப்பட்டது. இச்சிறப்பு வாய்ந்த 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.27-ம் தேதி மகாசிவாரத்திரியன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. 5 நாட்களும் பிரபல நாட்டியக்கலைஞர்கள், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடி, நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர்.
விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...